
தபால் திணைக்களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தபால்களை வழங்குவதில் தாமதநிலை ஏற்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அதிகாரிகளை தெளிவுபடுத்தி உள்ள போதிலும் அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





