போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் இலங்கையில் கைது!!

490

1 (13)

பாகிஸ்தானியர் ஒருவர் பாரிய தொகை போதைப் பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது குறித்த பாக்கிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ஒருகிலோ போதைப் பொருள் கைப்பற்றட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறித்த பாகிஸ்தான் பிரஜை இன்று கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.