அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; தேடும் பணிகள் தீவிரம்!!

680

planelanding_682_710773a

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும் துறைமுகத்திற்கு அருகில் கடலில் விழுந்து மூழ்கியதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் பணியில் நீச்சல் வீரர்களும், மீட்புகு ழுவினரும் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிருடன் உள்ளனரா? விமானத்தில் எத்தனைபேர் பயணம் செய்தனர்? என்பது பற்றி உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

துறைமுக நுழைவு பகுதி அமைந்துள்ள இடத்தில் இருந்து 2 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் 90 அடி ஆழமுள்ள கடற்பரப்பில் இரண்டு விமானங்களும் விழுந்து கிடக்கலாம் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இரண்டு விமானங்களும் விமானிகள் அனுபவமுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.