
அமெரிக்காவில் இயங்கும் “க்லோபல் டயக்னொஸ்டிக் டிவைஸ் என்ட் ஸர்வீஸ் பிரொவய்டர்” நிறுவனத்தின் (global diagnostic device and service provider) பிரதம நிறைவேற்று அதிகாரியான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவர் ஒரே தடவையில் 11.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் பிரபல வைத்திய உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமாக இது காணப்படுகின்றது.
இலங்கையைச் சேர்ந்த நாமல் நவன என்பவரே இந்தப் பணத்தொகையை பெற்றுக் கொள்கின்றார்.
இந்நிறுவனத்தின் நிறுவுனரான ரொன் ஸ்வஞ்சர் (Ron Zwanzger) கடந்த 2014ம் ஆண்டு பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்ததையடுத்து நாமல் நவன என்பவர் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்க்பபட்டார்.
இலங்கையைப் பிறப்பிடமாக கொண்ட நாமல் நவன என்பவர் அவுஸ்திரேலியாவில் வளர்ந்து பின்னர் 1990 களில் மருத்துவ துறை சம்பந்தமான மேலதிக கல்விக்காக ஐரோப்பா சென்றார்.






