பவுசருடன் மோதிய கார் – இருவர் பலி, ஒருவர் காயம்!!

609

1 (59)

கண்டி – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை காருடன் டக்டர் பவுசர் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியானவர்கள் காரில் பயணித்த 42 மற்றும் 39 வயதான இருவர் எனவும் இவர்கள் கண்டி மற்றும் கடுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் டக்டர் பவுசர் சாரதி காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்த விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.