
திருமணம் செய்ய மறுத்த 16-வயது மாணவியை அவரது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்.பீகார் தலைநகர் பாட்னா அருகில் உள்ள மாசார்ஹி காவல் நிலையத்திற்கு உள்பட்ட புராணி பஜார் பகுதியை சேர்ந்த மாணவி குஷ்பு (16), 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மாணவி குஷ்புவை, அவருடன் வயதில் மூத்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவருடைய தந்தை சுனில் தாகூர் மற்றும் சித்தி பூணம் தேவி வற்புறுத்தியுள்ளனர்.ஆனால் படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவி திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
கடந்த 3-ம் திகதி மாலை மாணவி குஷ்புவிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர் மீது இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்துள்ளனர்.காயம்டைந்த மாணவி குஷ்புவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பின்னர் குஷ்புவின் மூத்த சகோதரன் அம்ரித் ராஜ் பொலிசில் புகார் அளித்துள்ளார்.பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





