கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை!!

789

IN11_C_V__WIGNESWA_2337718f

தற்போதைய காலத்தில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, சர்வதேச அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தால் அவ்வளவு சரியென ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், சிரியாவிலும் அவ்வாறான பொதுமன்னிப்பு கொடுப்பது தவறு என தான் எடுத்துக் கூறியதாவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்ததாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இவ்வாறான தொரு நிலைப்பாட்டில் தாங்கள் இருப்பதாயின் விரைவாக வழக்குகளை நடத்தி முடிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என, தான் எடுத்துக் கூறியதாகவும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக, மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் அவரது குழுவினர்கள் வடமாகாண முதலமைச்சரை, அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.