மண்மேடு சரிந்து விழுந்து பெண் பரிதாபமாக பலி!!

416

1 (40)

இரத்தினபுரி – கோரககோட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் நிலவும் அதிக மழையுடனான காலநிலையே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 70 வயதான குறித்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட பின்னரே பலியாகியுள்ளார். இவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.