சட்டவிரோதமாக வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்டவர் கைது!!

631

1 (13)

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட 55 வயதான இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இன்று (08) அதிகாலை 01.30 அளவில் அவர் சிங்கப்பூர் நோக்கி செல்ல முற்பட்ட வேளையே கைதாகியுள்ளார்.

இவர் வசம் இருந்து 30,000 யூரோ, கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றின் பெறுமதி 4,905,768 ரூபா எனவும் சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இலங்கை சுங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.