
பெங்களூருவில் தனியார் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.குண்டனஹல்லியில் தனியார் பள்ளி வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.பள்ளி வளாகத்தில் சிறுத்தை சுற்றித் திரிவதை சிசிடிவி கேமராவில் பார்த்த காவலாளிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வந்த வனத்துறையினர் இரண்டு குழுக்கள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.சிறுத்தையை பிடிக்க பல மணி நேரம் போராடிய முயற்சியில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் புகைப்பட கலைஞர் ஒருவர் சிறுத்தையை படம் பிடிக்க முயன்றார்.அப்போது ஆக்ரோஷமடைந்த அந்த சிறுத்தை புகைப்பட கலைஞரை தாக்கி கடித்து குதறியுள்ளது.பள்ளி வளாகத்துக்கு அருகில் இருக்கும் வனப்பகுதி வழியாக அந்த சிறுத்தை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.





