
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சிம்லாவில் நேற்று அளவுக்கு அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டது தலைநகர் டெல்லியில் நேற்றும் இன்றும் கடுமையான பனி பெய்தது. இன்று அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
இதனால் டெல்லி நகரமே புகை மூட்டத்தில் மூழ்கியது. சில அடி தொலைவுக்குள் வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிறைந்திருந்தது. காலை 8 மணி அளவிலும் டெல்லியில் புகை மூட்டம் விலகாதபடி இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பதிக்கப்பட்டது
குறிப்பாக விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் தரை இறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், அருகில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மெட்ரோ ரயில் சேவையும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது போல பஸ்சேவையும் பல இடங்களில் முடங்கியது. கரும் புகை மூட்டத்தால் டெல்லி மக்களின் காலை நேரப்பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது





