2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது: பிரான்ஸ் தலைவருக்கு கிடைத்தது!!

341

lyer_leader_004

பிரான்ஸ் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் குறித்து அதிகளவில் உண்மைக்கு எதிராக பொய் பேசியதற்கான விருது அந்நாட்டை சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவருக்கு கிடைத்துள்ளது.உலகிலேயே முதன் முதலாக பிரான்ஸ் நாட்டில் கடந்தாண்டு ஒரு வினோதமான விருது வழங்கும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

“Liar of the Year’ எனப்படும் அந்த விருது பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதிகளை குறிவைத்து வழங்கப்பட்டு வருகிறது.அதாவது, பிரான்ஸ் குடிமக்களுக்கு உண்மைக்கு எதிரான தகவல்களை தெரிவிக்கும் அரசியல்வாதிகளை பட்டியலிட்டு, அவர்களில் அதிகளவில் பொய்யான தகவல்களை மக்களுக்கு தெரிவித்த அரசியல்வாதிக்கு இந்த விருது அறிவிக்கப்படும்.

இந்த விருதை தெரிவு செய்யும் அமைப்பிற்கு அந்நாட்டை சேர்ந்த மிகச்சிறந்த அரசியல் விமர்சகரான Thomas Guenole என்பவர் தலைமை தாங்குகிறார்.மேலும், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளின் பட்டியலை தயார் செய்யவார்கள்.

இந்த விருதின் மூலம் தனது தவறுகளை திருத்திக்கொண்டு மக்களுக்கு சரியான தகவல்களை அரசியல்வாதிகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் மக்களுக்கு அதிகளவில் பொய்யான தகவலை அளித்த அரசியல்வாதிகளின் பட்டியலில் பிரான்ஸ் நாட்டு தேசிய முன்னணி கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதியான மரீன் லீ பெண்(Marine Le Pen) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் மக்களுக்கு அதிகளவில் பொய்யான தகவல்களை, குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் உள்ள புலம்ப்பெயர்ந்தவர்களை குறித்து அதிகளவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார்.உதாரணத்திற்கு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு குடியேற வரும் அகதிகளின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் தினந்தோறும் 10 மடங்காக அதிகரித்துள்ளது என ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.

ஆனால், உண்மையில் இது ஒரு பொய்யான தகவல்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்தவர்கள் 10 மடங்காக அதிகரிப்பது சாத்தியம் இல்லாத விடயம்.மற்றொரு சம்பவத்தில், கெலைஸ் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தீவிபத்து ஏற்பட்டபோது அங்கு வந்த தீயணைப்பு வீரர்களை அகதிகள் அடித்து நொறுக்கினார்கள் என பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

ஆனால், ’மரீன் கூறியுள்ளது முற்றிலும் தவறானது. எங்களை அகதிகள் யாரும் தாக்கவில்லை’ என தீயணைப்பு துறையே பின்னர் விளக்கம் அளித்தது.இதேபோல், பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரி வரும் அகதிகளில் 99 சதவிகிதத்தினர் ஆண்களாகவே உள்ளனர் என கூறினார். பின்னர் இந்த புள்ளிவிபரத்தை அவரே குறைத்து 75 சதவிகிதம் என அறிவித்தார்.

ஆனால், உண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு குடியேற வரும் அகதிகளில் 69 சதவிகிதத்தினர் மட்டுமே ஆண்கள் ஆகும்.இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் குறித்து பொய்யான தகவல்களை அள்ளி வீசிய இந்த அரசியல்வாதியை கெளரவிக்கும் விதத்தில் ‘Liar of the Year -2015’ என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான மரீன் லீ பெண், அடிப்படையில் இருந்து அகதிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளவர் என்பதால், அவர்களை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.