
பெங்களூரில் நடைபெற்ற 9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலைபோயுள்ளார். ஏலம் தொடர்பான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அணியில் சில முன்னணி வீரர்கள் கூட ஏலம் போகாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 16 வீரர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. திசர பெரேரா, மகேல ஜெயவர்த்தன, லஹிரு திரிமான, நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ், சசித்ர சேனநாயக்க, துஷ்மந்த சமீர, டிஎம்.டில்ஷான், ஜீவன் மெண்டிஸ், தில்ருவன் பெரேரா, ஷேஹன் ஜெயசூர்ய, தாசன் சனக, மிலிந்த சிறிவர்தன, இசுரு உதான, டில்ஷான் முனவீர, சீகுகே பிரசன்ன.
இதில் திசர பெரேராவை மட்டும் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 1 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது. மற்ற 15 வீரர்களையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த 15 பேரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.





