
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இலங்கைக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் இடம்பெறும் இந்தத் தொடரில் இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் நீச்சல் போட்டியில் மெத்தியூவ் அபேசிங்க தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
மேலும், பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டிகளில் இலங்கையின் கிமிகோ ரஹீம் (Kimiko Raheem) முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.





