குடும்பப் பிரச்சினை காரணமாக ஒருவர் சுட்டுக் கொலை!!

1165

gun-firing

மினுவான்கொட – பில்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.45 அளவில் அப் பகுதிக்கு வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் 32 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களை கைதுசெய்ய மினுவான்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.