45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு!!

513

just_a_paddy_field_by_cruxiaer-d552mjp

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார்.இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது.மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.