கட்டுமஸ்தான தசைகளுடன் காணப்படும் கங்காரு ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. ரொஜர் எனப் பெயரிடப்பட்ட இந்த கங்காரு மனித பொடிபில்டர்களைப் போன்று காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு சிறு குட்டியாக இருந்த ரொஜர், அதன் தாய் இறந்த பின்னர் அவுஸ்திரேலியாவின் வட பிராந்திய நகரரொன்றில் வீதி ஓரத்தில் அநாதையாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வனவிலங்கு சரணாலயமொன்றுக்கு அனுப்பப்பட்டது.
இப்போது 7 அடி உயரமாக வளர்ந்துள்ள இக் கங்காரு உருண்டு திரண்ட தசைகளைக் கொண்டுள்ளது. சுமார் 90 கிலோ எடையைக் கொண்டுள்ள இக் கங்காரு, பல்வேறு விதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளது. இப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை கவர்ந்துள்ளன.