
உடப்புஸ்ஸலாவ நகரில் இரு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இரு இந்தியர்களும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளதோடு, இங்கு சாஸ்திரம் சொல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 16ம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.





