
வவுனியா நெடுங்கேணி வைத்தியசாலையில் கடந்த ஒரு மாதகாலமாக அம்பியுலன்ஸ் இன்மையால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் பழுதடைந்துள்ள நிலையில் ஒரு மாதமாகியும் திருத்தம் செய்யப்படாத நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் புளியங்குளம் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் ஓமந்தை, நவ்வி, புளியங்குளம். நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கும் சேவையில் ஈடுபட வேண்டியுள்ளமையால் நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு செல்வதானால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வட மாகாணத்தில் அவசர அம்புலன்ஸ் சேவை செயற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு மாதகாலமாகியும் அம்புலன்ஸ் திருத்தம் செய்யப்படாமல் உள்ளமை தொடர்பிலும் நெடுங்கேணி பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.





