வருட ஆரம்பத்திலேயே 26 எயிட்ஸ் நோயாளர்கள் கண்டுபிடிப்பு!!

446

69416_resized_aids_ribbon

இவ் வருட ஆரம்ப கட்டத்திலேயே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 26 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என, சுகாதார அமைச்சின் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்புப் வேலைத் திட்டப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இவ் வருடம் குருநாகல் மாவட்டத்திலும் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பில் மக்களுக்கும் தௌிவூட்டும் பொருட்டு விரிவான நடவடிக்கைகளை இவ் வருடம் மேற்கொள்ளவுள்ளதாக, சிசிர லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.