சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள்: ஓராண்டு சிறை, 300 கசையடி வழங்க தீர்ப்பு!!

707

z-sattai

சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கடற்கரை குடியிருப்பு ஒன்றில் மது விருந்து நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த சிறப்பு பொலிசார், அங்கு மது போத்தல்களுடன் ஆபாச வீடியோ பதிவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.அந்த குடியிருப்பின் அருகாமையில் வசித்து வரும் நபர்கள் சிறப்பு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மது அருந்தியிருந்த சிலர் கைது நடவடிக்கையை எதிர்த்து அப்போது குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.மது மற்றும் ஆபாச படங்களுக்கு சவுதியில் தடை இருந்து வரும் நிலையில் இதுபோன்ற விருந்தை பெரு வணிகர்களின் அல்லது உயர் அதிகாரிகளின் வாரீசுகள் மட்டுமே நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

கைது செய்த நபர்களை பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை அடுத்து அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் தலா 300 கசையடியும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.சவுதி சட்டத்தின்படி உறவினர்களுடன் அல்லாமல் பெண்களை வேறு ஆண்களுடன் பழக அனுமதிப்பதில்லை.

கடந்த 2002 ஆம் ஆண்டு மெக்கா பகுதியில் தீக்கிரையான பாடசாலையில் இருந்து தலையை உரிய முறையில் மூடாத காரணத்தால் மாணவர்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.இந்த முடிவின் காரணமாக அந்த பள்ளியில் தீவிபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.