திருமணச் சான்றிதழ் இல்லாமல் பிரதமர் மோடி பாஸ்போர்ட் பெற்றது எப்படி? விவரங்கள் கேட்டு மனைவி மனு!!

1396

Modi-1

பிரதமர் நரேந்திர மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு அவரது மனைவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் கடந்த நவம்பர் மாதம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

அப்போது அவர் தனது திருமண சான்றிதழையோ, மோடியை திருமணம் செய்ததற்கான இருவரும் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தையோ தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து அவர் மோடியுடன் திருமணம் ஆனவர் என்பதை நிரூபிக்க தவறியதாக கூறி அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டப்படி விண்ணப்பம் கொடுத்துள்ளார்.அதில், நரேந்திர மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது பாஸ்போர்ட் பெறுவதற்காக திருமணம் தொடர்பாக தாக்கல் செய்த ஆவணங்களை வழங்கும்படி கேட்டுள்ளார்.இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட அதிகாரி, யசோதாபென் கேட்டிருக்கும் ஆவணங்கள் அளிக்கப்படும் என்று பாஸ்போர்ட் மண்டல அதிகாரி கான் தெரிவித்துள்ளார்.