
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 24 தங்கப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது. வெள்ளிப் பதக்கங்கள் 46, வெண்கலப் பதக்கங்கள் 63 உள்ளடங்களாக இலங்கை 133 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. அதன்படி இலங்கை பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது.
இந்தியா இதுவரை 118 தங்கப் பதக்கங்களையும் 63 வெள்ளிப் பதக்கங்களையும் 17 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பதுடன் 07 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அத்துடன் பாகிஸ்தான் 20 வெள்ளிப் பதக்கங்களையும் 33 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 60 பதக்கங்களை வென்றுள்ளது.





