பெண்ணொருவர் எரித்துக் கொலை!!

503

fire

தெல்தெனிய – திகன – கும்புக்கதுர பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அருகில் பெண்ணொருவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் 35 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, தெல்தெனிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.