வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

679

 
வவுனியா சாந்தசோலையில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் ஆலய ஆஞ்சநேயருக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (12.02.2016) ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு எஸ்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ் அடிக்கல் நாட்டு வைபவத்தில் பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் நகர பிதாவும், வட மாகாண சபை உறுப்பினருமான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், உறுப்பினர்களான எஸ்.சுகந்தன், ஜெ.கயூரன் ஆகியோருடன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், அயற்கிராம ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், பொது மக்கள், ஆலய பக்தர்கள், கிராம மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

1 2 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26