80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு: ஜேர்மன் அரசு அதிரடி அறிவிப்பு!!

253

wolf_protect_002

ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், காடுகளில் தற்போது புதிதாக ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஓநாய்கள் மனிதர்களை வேட்டையாடுவது இல்லை. அதேபோல், மனிதர்களும் ஓநாய்களை வேட்டையாட சட்ட ரீதியாக தடையுள்ளது.எனினும், கடந்த சில ஆண்டுகளில் ஓநாய்களுக்கு சுமார் 125 வளர்ப்பு விலங்குகள் பலியாகியுள்ளன.இந்நிலையில், தற்போது மீண்டும் நடமாட்டத்திற்கு வந்துள்ள ஓநாய்களை வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க அரசு ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சரான Barbara Hendricks என்பவர் நேற்று வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களை பாதுகாக்க அரசு 4,25,000 யூரோ ஒதுக்கியுள்ளது.இந்த நிதியானது சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பப்பட்டு, ஓநாய்களின் நடமாட்டத்தை கண்காணித்து தகவல் சேகரிக்கவும், ஓநாய்கள் நடமாட்டத்தின் போது எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் செலவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.குறிப்பாக விவசாயிகள், ஆடு/மாடு மேய்ப்பவர்கள் மற்றும் வேட்டைக்கு செல்பவர்கள் ஓநாய்களுடன் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.