மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!!

304

cycled_doctor_005

பிரித்தானியாவின் மருத்துவர் ஒருவர் சேவை செய்யும் பொருட்டு தமது மிதிவண்டியில் 73 நாடுகளை சுற்றிவந்து சிகிச்சை அளித்து வருவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.பிரித்தானியா மருத்துவரான ஸ்டீவென் ஃபெய்ப்ஸ் சாகச பயணத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டதால் தனது வாழ்க்கையை எளிமைப்படுத்தவும் உலகை மிக நெருக்கமாக தெரிந்து கொள்ளவும் தனது பணியை பிறருக்கு வழங்கவும் ஆசைப்பட்டதால் இந்த பயணத்தை ஆரம்பித்ததாகவும் இந்த பயணத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்தி இதுவரை ஐரோப்பா, மத்திய கிழக்கு பகுதி வழியாக ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

இந்த பயணங்களின் வாயிலாக பிரித்தானியா மருத்துவமனைகளில் பணிபுரியும்போது கிட்டாத பல அனுபவங்களை தாம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.தீவிர வறுமை, ஊட்டச்சத்தின்மை, எயிட்ஸ் போன்ற பாதிப்புகளால் சமூக்கத்தில் இருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ள மக்கள் என பலதரப்பினரை நேரிடையாக காண முடிந்தது ,கடந்த ஆறு ஆண்டுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் பல சம்பவங்களும் தாம் எதிர்கொண்டதாக தாம் தங்கியிருந்த கூடாரத்தின் வெளியே பல முறை நச்சுப்பாம்புகளும் சிங்கங்களும் உலாவுவதை கண்டதாகவும்,மலேசியாவில் தங்கியிருந்த போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், மற்றும் எகிப்தில் ஒரு கூட்டம் சிறுவர்களால் கடுமையாக தாக்கபட்டதாகவும் தெரிவித்தார்.