
கல்யாண வீட்டிற்கு வந்த பெண்ணின் 19 லட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதென்று யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய், வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தங்கராணி என்பவர் தனது உறவினரின் வீட்டிற்கு கல்யாணத்திற்காக சென்றுள்ளார். இதன்போது தனது தாலிக்கொடி உட்பட பல நகைகளையும் பணத்தினையும் தனது கைப்பையில் வைத்திருந்துள்ளார்.
அந்த வேளையில், கைப்பையில் இருந்த 19 லட்சத்து ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளன.
இதனையடுத்து யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





