வெள்ளவத்தைப் பகுதியில் ரயிலில் மோதுண்ட இளைஞர் பலி!!

611

1

வெள்ளவத்தைப் பகுதியில் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும் விபத்தின் பின்னர் கடுங்காயங்களுக்கு உள்ளான இளைஞர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 -30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.எனினும அவரை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2