
இலங்கை இந்திய அணிகளுகிடையில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேரா ஹெட்ரிக் சாதனையை பெற்றுள்ளார்.
சர்வதேச இருபதுக்கு 20 போட்டி வரலாற்றில் இம் மைல்கல்லை எட்டிய 4 ஆவது வீரராகவும் அவர் பதிவானார்.
இதுமட்டுமன்றி சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 என இரண்டு வகையான போட்டிகளிலும் ஹெட்ரிக் பெற்ற வீரர்களில் பிரட்லிக்கு அடுத்ததாக திசர பெரேரா பதிவானார்.
அவர் வீசிய 19வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளுக்கும் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.





