தூசுகளால் கணினிக்கு பாதிப்பு ஏற்படுமா?

389

dust pc1

ஆம் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் கணினி இயங்கும்போது ஏற்படும் வெப்பத்தை குறைப்பதற்காக கணினியின் உள்பகுதியின் பாகங்களை குளிர்விப்பதற்கான காற்றாடியில் இந்த தூசுகள் படிந்து வெளிக்காற்று கணினிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.

அதனால் கணினியின் உள்பாகம் மிக அதிக வெப்பமாகி கணினியின் உள்உறுப்புகள் பாதிப்படைவதற்கு ஏதுவாகின்றது மேலும் இவ்வாறு ஏற்படும் அதிகவெப்பத்தினை குறைப்பதற்காக இந்த காற்றாடியானது மிகவேகமாக ஓடவேண்டிய நிலைஏற்படுகின்றது இவ்வாறு காற்றாடி மிகவேகமாக ஓடும் சத்தத்தை வைத்தே தூசுகள் காற்றாடியில் அதிகஅளவிற்கு படிந்துள்ளதை அறிந்து கொள்ளமுடியும்.

இந்நிலையில் நம்முடைய கணினியின் CPU எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CoreTemp என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் பொதுவாக இயல்புநிலையில் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 55 டிகிரி இருக்கவேண்டும் அதைவிட அதிகமாக இருந்தால் கணினியின் உட்பகுதி தூசுகள் படிந்துள்ளன என அறிந்து கொள்ளலாம் பொதுவாக அனைத்து சிபியூவும் junction அல்லது thermal cutoff என அமைத்திருப்பார்கள் அதற்கு மேல் எனில் CPU இயங்காத வண்ணம் அமைத்திருப்பார்கள்.

அவ்வாறே நம்முடைய கணினியின் வன்தட்டு எவ்வளவு வெப்பநிலை உள்ளது என CrystalDiskInfo என்ற பயன்பாட்டினை செயல்படுத்தி பார்த்து அறிந்து கொள்ளலாம் எந்த பயன்பாடுகளும் இயங்காமல் கணினிமட்டும் இயங்கிடும் வழக்கமான நல்ல நிலைஎனில் 20 முதல் 55 டிகிரி இருக்கவேண்டும்

அதுமட்டுமின்றி இவ்வாறான தூசுகள் கணினியின் ports , connections ஆகியவற்றில் படிந்து தவறான இணைப்பையும், இணைப்பே ஏற்படுத்தமுடியாத நிலையையும் உருவாக்கிடும் மேலும் கணினியின் உள்உறுப்புகள் பாதிப்பாகி அவைகளை அதிக செலவிட்டு புதியதாக மாற்றியமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதனால் மடிக்கணினி எனில் காற்றோட்டமான பகுதியிலும் மேஜைக்கணினியெனில் அதனுடைய சுற்றுப்புற பக்கத்தில் வைத்துள்ள பலகத்தையும் கழற்றி வைத்தபின் Air Compressor அல்லது Vacum Cleaner அல்லது Swiffer/liquid-free dusting துணியை கொண்டு கணினியின் உட்பகுதியில் உள்ள தூசுகளை அவ்வப்போது சுத்தபடுத்தி நம்முடைய கணினியை தூசுகள் படியாமல் சுத்தமாக வைத்து கொள்வது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது.