போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி நடவடிக்கை!!

257

Smoking-cannabis

சுவிட்சர்லாந்தில் உள்ள 4 முக்கிய நகரங்களில் சட்டசிக்கல்கள் இன்றி போதை மருந்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள 4 முக்கிய நகரங்களான சூரிச், பாசெல், பெர்ன் மற்றும் ஜெனீவா பகுதிகளில் சிறப்பு விடுதிகளை அமைக்க அந்த நகர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து முடிவெடுக்க இந்த 4 நகரங்களின் அதிகாரிகளும் வியாழக்கிழமை அன்று மீண்டும் கூடி விவாதித்துள்ளனர்.சுவிஸ் நாட்டில் போதை மருந்து பயன்பாட்டிற்கு தடை இருந்த போதும் சட்டவிரோதமாக விற்பனையும் பயன்பாடும் நடந்தே வந்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிஸ் நாட்டின் 4 முக்கிய நகரங்களில் இந்த போதை மருத்து பயன்பாட்டிற்கு சிறப்பு விடுதிகளை அனுமதிக்கும் யோசனை எழுந்துள்ளது.இதனால் எந்த கெடுபிடியும் இன்றி 2,000 பேர் வரை இந்த விடுதிகளில் சென்று போதை மருந்து பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.இந்த சிறப்பு திட்டம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள், தொடர்ந்து இந்த விடுதிகள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

4 நகரங்கலின் இந்த சிறப்பு திட்டத்திற்கு அரசு மற்றும் மத்திய பொது சுகாதார அலுவலகம் அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.போதை மருந்து தொடர்பாக சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி முறை சட்டத்தின்படி பயன்படுத்துவதும் சொந்தமாக வைத்திருப்பதும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.போதை மருந்து தொடர்பாக சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 30,000 வழக்குகள் பதியப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.