
சிறுநீரக கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இலங்கை வைத்தியர்கள் தொடர்பாக அடையாளம் காண்பதற்கு இந்தியாவின் ஹைதரபாத் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பில் அண்மையில் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. குறத்த கடத்தல் சம்பவத்துடன் இலங்கை வைத்தியர்கள் குழுவொன்று நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
குறித்த வைத்தியர்கள் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவே இந்திய பொலிஸ் குழு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறுநீரக கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை சுகாதாரப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது சுகாதார அமைச்சரிடம் கையளிப்பட்டுள்ளது.





