ஒரு நாளில் 21 மணி நேரம் தூக்கம் விசித்திர பெண் !!

292

helen_004

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், ஒரு நாளில் 21 மணி நேரம் தூங்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த ஹெலன் வாட்டார்சன் என்ற 36 வயது பெண்மணி க்ளையின் லெவின் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் சுமார் 21 மணி நேரம் இந்த பெண்மணி தூங்குகிறார். மேலும் இவர் தூங்காமல் இருக்க மாத்திரைகளை உட்கொண்டாலும் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே இவரால் விழித்திருக்க முடிகிறதாக தெரிவித்துள்ளார்.

உலகில் இதுவரை க்ளையின் லெவின் சிண்ட்ரோம் என்ற இந்த அரிய வகை நோயால் 1000 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலன் எந்தவித வேலைகளும் செய்ய முடியாமல் ஒரே இடத்தில் தான் முடங்கி கிடக்கிறார். மேலும் ஹெலன் தற்போது தனது வேலையை விட்டுவிட்டு வீட்டில் தனது இரண்டு நாய்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.இதுகுறித்து ஹெலன் கூறுகையில், நான் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறேன், நான் வாழ்வில் முக்கிய தருணங்கள் அனைத்தையும் இழந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.