17 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் மீட்பு

495

695033143kg3

சுமார் 17 இலட்சம் ரூபா பெறுமதியான ஒருதொகை கேரள கஞ்சா மன்னார் – முசலி பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு எட்டுப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இவற்றை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 17 கிலோ 640 கிராம் கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், அவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்ட கஞ்சாவை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.