
நேற்று இலங்கை இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியில் 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி T20 போட்டிகளில் தனது மிகக் குறைவான ஓட்டங்களை பதிவு செய்ததுடன் 9 விக்கட்டுகளால் மோசமான தோல்வியை பதிவுசெய்தது.
இத் தோல்விக்கு நடுவர்களின் சில சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும் காரணம் என்றால் மிகையாகாது. இப் போட்டியில் கடமையாற்றிய இரு நடுவர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள் இலங்கை அணிக்கு எதிராக வழங்கிய 3 தீர்ப்புக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இத் தீர்ப்புக்கள் தொடர்பாக பலர் விமர்சித்துள்ளதுடன். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு விமர்சித்துள்ளார்..
“நடுவர்களின் தீர்ப்புகள் முழுமையாக ஏமாற்றமளிக்கின்றன. இந்தியாவுக்காக 13 பேர் விளையாடியதைப் போன்று உணர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார் மேலும் இலங்கை அணியினரின் மோசமான ஷொட் தெரிவுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.






