வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இன்று (15.02.2016) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய விளையாட்டுத்துறை ஆசிரியர் இடமாற்றப்பட்டதைக் கண்டித்து கடந்த 12.02.2016 பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருந்தது.
இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாமையால் மீண்டும் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






