வெள்ளவத்தைப் பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது!!

481

1 (8)

வெள்ளவத்தைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதி ஒன்றில் வைத்தே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 14 கிராம்100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் போதை விற்பனை மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும் 1 இலட்சத்து 38 ஆயிரத்து 200 ரூபாயையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண்ணும், 24 வயதான இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சந்தேக நபர்களை இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.