அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் சமர்பிப்பு!!

576

k18802046

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவை, அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களின் கொடுப்பனவுத் தொகையிலிருந்து 2000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ,அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே இத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் ஏனைய கொடுப்பனவுகளை 5 வருடங்களுக்குள் சேர்த்துக்கொள்ளவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.