மரணத்தை தழுவிய அன்பு மகள்: கண்ணீருடன் 8,000 கி.மீ நடைப்பயணத்தை தொடங்கிய தாயார்!!

796

mother_brginswalk_002

பிரித்தானியா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்த தன்னுடைய மகளை போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் தாயார் ஒருவர் நிதி திரட்ட சுமார் 8,000 கி.மீ தூரம் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள Cheltenham என்ற நகரில் நடாலியா(41) என்ற தாயார் தனது 5 வயது மகளான எலிசபெத் ஸ்பென்சருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டுருந்தபோது, துரதிஷ்டவசமாக அவரது மகளை வினோதமான நோய் ஒன்று தாக்கியுள்ளது.மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் பிரிஸ்டோல் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துக்கொண்டு சென்றதால், அவரது உடல்நலனும் மிகவும் பாதிக்கப்பட்டது.

17 நாட்கள் கடுமையாக போராடியும், கிறிஸ்துமஸ் தினத்தை காணாமலேயே குழந்தை மரணத்தை தழுவியது.அன்பு மகளின் இழப்பை தாங்காத தாயார், பல நாட்கள் துயரத்திலிருந்து விடுப்பட முயன்றுள்ளார்.அப்போது, ‘தனது மகளை இழந்தது போல் மற்றொரு தாயாரும் அவருடைய பிள்ளைகளை இழக்க கூடாது’ என முடிவெடுத்து தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்த பிரிஸ்டோல் குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்ட நடைப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக தனது மகளை இறுதியாக அழைத்துச்சென்ற டோர்செட் நகருக்கு நேற்று சென்று அங்கிருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.இது குறித்து தாயார் பேசியபோது, ‘எனது மகளை பிரிந்த துன்பத்தை விட இந்த 8,000 கி.மீ தூரம் கடினமானது இல்லை. இந்த தூரத்தை கடந்த என்னால் இயன்ற வரை நிதி திரட்டி மருத்துவமனைக்கு அளித்து மற்ற குழந்தைகளையும் பாதுகாக்க முயற்சி செய்வேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.இந்த நடைப்பயணத்தின் மூலம், சுமார் 1,00,000 பவுண்ட் நிதி திரட்ட தாயார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.