மதுக்கடையில் தகராறு செய்த வாலிபர்கள்: தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய நபர்!!

317

EAR-630x354

ஜேர்மனி நாட்டில் உள்ள மதுக்கடையில் வாலிபர்கள் இருவர் அடிதடியில் ஈடுப்பட்ட போது அதனை தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Stuttgart என்ற நகரில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது.இந்த மதுக்கடைக்கு நேற்று பிற்பகல் இரண்டு வாலிபர்கள் வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இதே பகுதியில் தன்னார்வ பொலிசார் இருவர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

மதுக்கடை வழியாக சென்றபோது, அங்கு இருவர் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இரு பொலிசாரும் விரைந்து சென்று வாலிபர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது, வாலிபர்களில் ஒருவர் பொலிசார் ஒருவரின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த 54 வயதான மற்றொரு பொலிசார், அந்த வாலிபரை பிடித்து அடக்க முயன்றுள்ளார்.பொலிசாரின் நடவடிக்கையால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், வெறியுடன் கத்தியவாறு பொலிசாரின் காதை கடித்து துண்டாக்கி கீழே துப்பியுள்ளான்.ரத்தம் பெறுக்கெடுத்து ஓடியவாறு அந்த பொலிசார் வலியால் கீழே விழுந்து துடித்துள்ளார். இந்நிலையில், மற்ற பொலிசாரும் தகவல் கிடைத்து அங்கு வந்து சேர்ந்தனர்.

காதை இழந்து துடித்த பொலிசாரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தகராறில் ஈடுப்பட்ட அந்த வாலிபரை கைது செய்ய முயன்றுள்ளனர்.இந்த நிலையிலும் ஆத்திரம் அடங்காத அந்த நபர், கைது செய்ய வந்த பொலிசாரையும் தாக்கி அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட பொலிசார் அந்த வாலிபரை தாக்கி மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் சோதனை செய்தபோது இடுப்பில் ஒரு கத்தியையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட வாலிபர் பல குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்ததால் அவரிடம் பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே சமயம், காதை இழந்த பொலிசாரை பரிசோதித்த மருத்துவர்கள் ‘காதை திரும்ப பொருத்தும் வாய்ப்பு இல்லை’ என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.