காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக வந்து பரபரப்பு ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா!!

435

Nayan

நேற்று காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். தமிழ் சினிமா நடிகர், நடிகர்களும் காதலர் தினத்தை வரவேற்று, அதை கொண்டாடினார்.

இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள்.

சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.