கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்-இலங்கைக்கு மேலாக பலூன் நிலைநிறுத்தம்!!

1007

Google

இலங்கை இன்று முதல் பலூன் வழி கூகுள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது.பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.

இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது.இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இன்டர்நெட் சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இன்டர்நெட் வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது.பலூன் வழி இன்டர்நெட் சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.