கோவிலுக்குள் கொள்ளையனுக்கு 10 நாள் விழா நடத்தி கொண்டாட்டம்!!

445

sun-temple-tamilnadu

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபூர் கப்ரடா என்னும் கிராமத்தை சேர்ந்தவன் சிவக்குமார் படேல்.இவன் உத்தரபிரதேசத்தில் உள்ள பந்தல்கண்ட் பகுதியில் மிகப்பெரிய கொள்ளையனாகத் திகழ்ந்தான். சுமார் 30 ஆண்டுகள் அவன் அந்த பகுதியில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்தான்.

கடந்த 2007ம் ஆண்டு சிவக்குமார் படேல் கோஷ்டிக்கும், பொலிஸ் சிறப்பு அதிரப்படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது சிவக்குமார் படேல் சுட்டுக் கொல்லப்பட்டான்.

‘‘தாதா’’ என்று அழைக்கப்பட்டு வந்த அவன், கொள்ளையனாக இருந்தாலும் தன் சொந்த ஊர் மக்களுக்கு எல்லா நன்மைகளும் செய்து வந்தான். 2003ல் அவன் தன் ஊர் மக்களுக்காக மிகப்பெரிய ராமர்கோவில் கட்டி கொடுத்திருந்தான்.ஊர் மக்கள் அவனுக்கு சிலை வைக்க முடிவு செய்தனர். கொள்ளையனின் தம்பி பால்குமார் சமாஜ்வாதி கட்சியில் எம்.பி.யாக இருந்தவர்.

அவர் ஏற்பாட்டின்படி கொள்ளையன் சிவக்குமார் படேலுக்கு சிலை தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் அந்த சிலை ராமர்கோவிலுக்குள் நிறுவப்பட்டது.இதையடுத்து தற்போது அந்த கோவிலில் 10 நாள் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையன் சிலைக்கு தினமும் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படுகின்றன.