சக வீரரின் சாதனைக்கு உதவிய மெஸ்ஸி: பெருந்தன்மையை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!

443

messi_suarez_002

பார்சிலோனா அணியின் சக வீரரான சுவாரஸ் கோல் அடிப்பதற்கு உதவிய மெஸ்ஸியின் செயலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். நேற்று முன் தினம் நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா- செல்டா டி விகோ அணிகள் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதி 1-1 என சமநிலை வகித்தது.

2வது பாதியில் 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் சுவாரஸ் கோல் அடித்து அசத்தினார்.இந்த நிலையில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் மெஸ்ஸியை, எதிரணியின் கேஸ்ட்ரோ கோல்போஸ்ட் அருகே தள்ளிவிட பார்சிலோனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.இந்த பெனால்டியை கோலாக மாற்ற மெஸ்ஸி தயாராக நின்று கொண்டிருந்தார்.ஆனால் திடீரென மெஸ்ஸி சக வீரரான சுவாரஸிக்கு பாஸ் கொடுத்து அவர் ’ஹாட்ரிக்’ கோல் அடிக்க உதவினார். இது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

அந்த கோலை மெஸ்ஸி அடித்திருந்தால் அது அவருக்கு 300வது கோலாக அமைந்திருக்கும்.ஆனால் 300வது கோலை எப்போது வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம் என அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார் மெஸ்ஸி.மெஸ்ஸியின் இந்தச் செயல்பாட்டை சக வீர வீரர்கள் மட்டுமின்றி, உலகின் அனைத்து கால்பந்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.இந்தப் போட்டியில் ரகிடிக் மற்றும் நெய்மார் ஆகியோரும் கோலடிக்க பார்சிலோனா அணி 6-1 என்ற கோல்கணக்கில் வென்றது.

மேலும், லா லிகா தொடரில் பார்சிலோனா அணி 57 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.அத்லெடிகோ மாட்ரிட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.