ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன?

425

baby-baggage

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும் Franga என்ற பெற்றோர் கடந்த 2014ம் ஆண்டு ஜேர்மனியில் புகலிடம் கோரி வந்துள்ளனர்.

ஜேர்மனியின் Rhine-Westphalia என்ற மாகாணத்தில் உள்ள Sauerland என்ற நகரில் தங்கிய 11 நாட்களுக்கு பிறகு தாயாருக்கு எடோனா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது இந்த குழந்தைக்கு 20 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த குழந்தை ஒரு வாரக் காலத்திற்குள் தாய்நாட்டிற்கு திரும்பிவிட உத்தரவிட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், ‘கடந்த 2015ம் ஆண்டு அல்பேனியா எந்த அச்சுறுத்தலும் இல்லாத பாதுகாப்பான நாடு என ஜேர்மனி அறிவித்தது. எனவே, அந்த நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு புகலிடம் கோரி வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே புகலிடம் குறித்து பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், அல்பேனியாவில் ஒரு நாள் கூட வசிக்காத அந்த குழந்தைக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, எடோனா என்ற பெயரிடப்பட்ட அந்த குழந்தை நாட்டை விட்டு வெளியேற ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், மீறினால் குழந்தையை நாடு கடத்த நேரிடும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.