தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்!!

376

7661127_f520

பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது.அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பழமாகும், மேலும் ரத்த நாளங்களுக்கு சத்துக்களை வழங்குகிறது.

தினமும் குடித்து வருவதன் மூலம் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சுவாச பிரச்னைகளால் வராமல் பாதுகாக்கிறது.மேலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம்.இதிலுள்ள பாப்பைன் என்ற நொதியினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பொலிவடைகிறது.