
மேகா, கத்துக்குட்டி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி. இவர் நடிப்பில் விரைவில் நவரச திலகம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்தில் இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் படபிடிப்பில் காதல் மலர்ந்ததாக வைரலாக ஒரு செய்தி பரவி வந்தது.
இதுக்குறித்து விபின் கூறுகையில் ‘நவரச திலகம் படத்தில் சிருஷ்டி டாங்கேவுடன் சேர்ந்து நடித்தேன். நாங்கள் நல்ல நண்பர்கள். நானும், அவரும் காதலிப்பதாக வரும் தகவல் உண்மையில்லை. இப்போது என் திருமணத்தில் அவசரம் இல்லை’ என்று மறுத்துள்ளார். இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





