வவுனியாவில் பாடசாலை மாணவி மர்மமான முறையில் மரணம் : கொலையா? தற்கொலையா?

1034

 
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16.02.2016) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வரும் பாடசாலை மாணவி இன்று மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை 07.30 மணியளவில் தாயார் வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த கரிஸ்னவி (வயது 13) மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

02.30 மணியளவில் தாயார் வீட்டிற்கு சென்ற போது தூக்கில் தொங்கிய தனது மகளை தூக்குக் கயிற்றினை கழற்றி மீட்டெடுத்தார். தாயார் அறைக்கு சென்று பார்த்த போது அறை முழுவதும் அலங்கோலமான நிலையில் காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தாயார் தெரிவிக்கையில்..

இன்று காலை எனக்கும் என் மகளுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் பாடசாலை செல்லாமல் மகள் வீட்டில் தனியாக இருந்தார். நான் வேலையே முடிந்து வீட்டிக்கு வந்து பார்க்கும்போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் எனத் தெரிவித்த அவர், இக் கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்..



இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

20160216_151015 20160216_151101 20160216_151107 20160216_151114 20160216_151225 20160216_151233 20160216_151317 20160216_151322 20160216_151329 20160216_151332 20160216_151340 20160216_151410 20160216_152058 20160216_152106