இலங்கை – ஜேர்மனுக்கு இடையில் சில ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்து!!

484

Flag-Pins-Sri-Lanka-Germany

ஜேர்மனுக்கு விஜயம் செய்து மூன்றாவது நாளான இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு சான்சிலர், ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், இன்று இரு நாடுகளுக்கும் இடையில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக, ஜேர்மனியின் பர்லின் நகரிலுள்ள எமது விஷேட பிரதிநிதி ஷேகான் பரணகம தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாலை ஜேர்மன் சான்சிலருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது சான்சிலர் விஷேட உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஊடகவியலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த நாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதே தனது ஜேர்மன் விஜயத்தின் நோக்கம் என, இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.